Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உலகின் பாசக்காரத் தந்தைகள் : அகா பிக்மி பழங்குடியினர் – டாக்டர் ஃபரூக் அப்துல்லா

மத்திய ஆப்ரிக்காவில் அகா பிக்மி பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பழங்குடியினத்தினர்  வேட்டையாடிச் சேகரித்து (HUNTERS & GATHERERS) வாழும் பூர்வகுடி மரபினர் ஆவர்.

ஏனைய இனக் குழுக்களில் ஆண்கள் வேட்டையாடிகளாகவும் பெண்கள் சேகரிப்பாளர்
களாகவும் இருக்கும் சூழ்நிலையில், இந்தப் பழங்குடி இனத்தில் இரண்டு பாலினத்தவரும் தங்களது கடமைகளைத் தேவைக்கு ஏற்ப இயல்
பாகவே மாற்றி அமைத்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் பெற்றெடுப்பது பெண்களால் மட்டுமே முடியும் என்றாலும்  கணவன்மார்கள் எந்த ஆதிக்க மனப்பான்மையும் இல்லாமல் அல்லது கூடுதல் வேலையாகவோ, சுமையாகவோ எண்ணாமல் தங்களது கடமையாகவே குழந்தைகளை வளர்ப்ப
தைச் செய்து வருகின்றனர்.

எந்த அளவுக்கு என்றால் 20 ஆண்டுகள் அவர்களுடனே வாழ்ந்து ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் ஹெவ்லட் என்பவர், ஆய்வு செய்த
தில் 47% முறை பிறந்த
குழந்தைகள் தந்தைமார்
களின் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்துள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, குழந்தை
களுடனே தந்தைமார்கள் பெரும்பான்மை நேரத்தைச் செலவழித்துள்ளது பற்றிப் பதிவு செய்துள்ளார்.

அதாவது, குறைந்தபட்சம் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்காவது கீழே தரையிலேயே விடப்படாமல் ஒன்று தாயிடமோ அல்லது தந்தையிடமோ தான் தோலோடு தோல் ஒட்டி இருக்குமாம்!

குழந்தைக்கென தனியாக தொட்டிலோ கட்டிலோ வைக்கும் பழக்கம் இந்தப் பழங்குடி இனத்தில் கிடையாதாம்!

குறை மாதத்தில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்குக் கங்காரு மதர் கேர் என்னும் பெயரில் தாயின் தோலுடன் தோல் ஒட்டி வைத்து வளர்க்கும் சிகிச்சை முறை 20ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் பிரசித்தி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தாய்மார்கள் வேட்டைக்குச் செல்லும் போது தந்தைமார்கள் குழந்தைகளை வளர்ப்பதில் இருந்து சமைப்பது வீட்டைப் பராமரிப்பது வரை பார்த்துக் கொள்வார்கள்.

குழந்தைகள் பாலுக்காக அழும்போது  தங்களது
மார்பில் குழந்தைகளை வைத்து  சூப்பச் செய்து (PACIFIER) குழந்தைகளின் அழுகையைச் சரிசெய்யும் அளவுக்கு அவர்களது தந்தைப் பாசம் செல்லும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு தந்தையின் தொடுதலும் அணைத்தலும் முக்கியம் என்பதை அகா பிக்மி பழங்குடி இன மக்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர்.

உலகத்திலேயே தலை
சிறந்த பாசக்காரத் தந்தை
மார்கள் வாழும் பழங்குடி இனம் – அகா பிக்மி பழங்குடி இனம் என்றால் அது மிகையாகாது.

கூடவே தாய்ப்பாலின் மகத்துவத்தையும் அறிந்தவர்கள்.

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்  ஆகஸ்ட் 1 தொடங்கி நடந்து வருகிறது.

தாய்ப்பாலின் மகத்துவம் அறிவோம்!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதை முன்னிலைப்படுத்துவோம்!

தாய்மார்கள் வாழும் வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் பயணம் செய்யும் இடங்களிலும் பாதுகாப்பாகத் தாய்ப்பால் கொடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திடுவோம்!

நன்றி.  l