
சிவபாலன்
இளங்கோவன்
மனநல மருத்துவர்
இந்த அப்சசனிலும், கம்பல்சனிலும்
பல வகைகள் இருக்கின்றன :
இணையத்தில் சற்று நேரம் அப்சசனின் வகைகள் என்று தேடினாலே ஏராளமான வகையிலான அப்சசன்கள் கொட்டிக் கிடக்கும். அண்மையில், இளைஞன் ஒருவன் தனக்கு அப்சசன் இருப்பதை உணர்ந்து கொண்டு அது என்ன வகையிலானது என்று இணையத்தில் தேடியிருக்கிறான். ஆனால், இணையத்தில் குறிப்பிட்ட எந்த வகையிலும் அவனுக்கிருக்கும் அப்சசன் அடங்கவில்லை. அப்படியென்றால் தனக்கிருப்பது அப்சசன் இல்லையோ என்ற
கவலை வந்த பிறகு
என்னை வந்து பார்த்தான். நிறைய பேர் அப்சசன் தொடர்பாக நிபுணர்களைப் பார்ப்பதற்கு முன்பாக இணையத்தில்தான் தேடுகிறார்கள். இணையத்தில் இல்லையென்றால் அது அப்சசன் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

இணையத்தில் உங்களுக்கு இருக்கும் அப்சசன் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ இல்லையோ என்கிற
கவலை வேண்டாம். கீழே சொல்லியுள்ள தன்மைகள் உங்களுக்கிருக்கும் அப்சசனுக்கு இருக்கிறதா என்று பாருங்கள்:
- ஏதாவது ஒரு எண்ணம், தூண்டல், பயம், சந்தேகம், காட்சி, யோசனை திரும்பத் திரும்ப வருகிறதா?
- அப்படி வருபவை உங்களது விருப்பமின்றி, தேவையில்லாமல் வருகிறதா?
- எந்த நேரமும் அது உங்கள் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறதா?
- இப்படியெல்லாம் யோசிக்கவோ அல்லது பயப்படவோ அல்லது சந்தேகப்படவோ அல்லது சிந்திக்கவோ கூடாது என நீங்கள் நினைத்தும் அதை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா?
- அப்படி வரும் எண்ணத்தினாலோ அல்லது பிற அப்சசன்களினாலோ மிகுந்த மனவுளைச்சலும், பதட்டமும் கொள்கிறீர்களா?
- சில நேரங்களில் இந்த மனவுளைச்சலில் இருந்தும், பதட்டத்தில் இருந்தும் தற்காலிகமாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்களா?
- இதனால் வழக்கமான உங்களது அன்றாடச் செயல்கள், ஈடுபாடு, கவனம் போன்றவை பாதிக்கப்பட்டிருக்கிறதா?
இவற்றுக்கெல்லாம் ‘ஆமாம்’ என நீங்கள் பதிலளித்தால், நிச்சயமாக உங்களுக்கிருப்பது அப்சசன்தான். இணையத்தில் இருக்கிறது –
இல்லை எனக் கவலை கொள்ளாமல் உடனடியாக
மனநல மருத்துவரை அணுகிட வேண்டும்.
அப்சசனின் வகைகளைப் பொறுத்த வரை, மேலே குறிப்பிட்ட தன்மைகளில் இருக்கும் அனைத்தும் அப்சசனே! ஆனால், பொதுவாக காணப்
படும் சிலவகை அப்சசன்
களை மட்டும் இங்குப் பார்ப்போம்:
உக்கிரமான அல்லது தீமை விளைவிக்கும் எண்ணங்கள்:
இந்த வகைகளில் வரும்
அப்சசன்கள் ஆக்ரோசமான
தாகவும், வன்முறை மனப்
பான்மை கொண்டதாகவும்,
ஆபத்தான விளைவுகளை
பற்றியான சிந்தனைகளாகவும் இருக்கும்.
தன்னையோ அல்லது மற்றவர்களையோ காயப்படுத்தி விடுவேனோ என்ற எண்ணம்:
தன்னால் தனக்கோ அல்லது மற்றவர்
களுக்கோ ஏதாவது ஆபத்து வந்துவிடுமா அல்லது காயப்படுத்திவிடுவோமா என்ற எண்ணம் திரும்பத் திரும்ப வரும். காயப்படுத்த எந்த முகாந்திரமும், தேவையும், வாய்ப்பும் இல்லையென்றாலும் கூட இந்த எண்ணம் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கும். அண்மையில், கல்லூரி மாணவன் ஒருவன் அவனது விடுதியில் மூன்றாம் தளத்தில் இருக்கும் போதெல்லாம் அங்கிருந்து குதித்து விடுவேனோ என்ற தோன்றியிருக்கிறது. அங்கு மட்டுமல்ல எங்கு உயரத்தைப் பார்த்தாலும் குதித்து விடுவேனோ என்ற எண்ணம் திரும்பத் திரும்பத் தோன்றியதால் விடுதியில் இருந்து யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு தனது வீட்டுக்குப் போய்விட்டான்.
இன்னொரு நடுத்தர வயது ஆண், அவருக்கு எந்த உயரமான இடத்திற்குச் சென்றாலும், அங்கிருந்து யாரையாவது தள்ளிவிட்டு விடுவேனோ என்ற பயம். நான் ஏன் அப்படிச் செய்யப் போகிறேன் என அவருக்குள் சமாதானப்படுத்திக்கொண்டாலும், திரும்பத் திரும்ப இந்த எண்ணம் அவருக்குள் தோன்றிக்கொண்டேயிருந்திருக்கிறது.
பயங்கரமான, அச்சுறுத்தும் காட்சிகள்:
எண்ணங்கள் மட்டுமல்லாமல் சிலருக்கு ஏதாவது ஒரு பயங்கர
மான, திகிலான காட்சிகள் திரும்பத் திரும்பத் தோன்றிக்
கொண்டிருக்கும். ஒரு படம் போல அந்தக் காட்சி
திரும்பத் திரும்ப ஓடிக்
கொண்டிருக்கும். வங்கியில் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு எப்போது காரை ஓட்டினாலும் அந்தக்
கார் கொடூரமாக விபத்துக்
குள்ளாகி அதில், தான் சிக்கிக்
கிடப்பது போல காட்சி – காரை நிறுத்தும் வரை விடாது அவரது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். யாரிடமும் சொல்லவும் முடியாமல், சொன்னாலும் யாரும் புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதையும் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கார் ஓட்டுவதையே நிறுத்தியிருக்கிறார்.
அண்மையில் பிரசவித்த தாய்க்கு, கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான பொருள்கள் எதைப் பார்த்தாலும், அதை எடுத்து தனது குழந்தையைக் குத்திவிடுவேனோ என்ற பயம் திரும்பத் திரும்ப மனதில் தோன்றியிருக்கிறது. நீண்ட நாள் கழித்துப் பிறந்த குழந்தை, ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தை. ஒரு தாயாக அந்தக் குழந்தையை எப்படி நினைக்க வேண்டும், ஆனால், இப்படி ஏன் வக்கிரமாக, குரூரமாகச் சிந்திக்கிறோம் என அந்தத் தாய்க்கு அவ்வளவு குற்றவுணர்ச்சி. இந்தக் குற்றவுணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அந்தக் குழந்தையின் மீது வெறுப்பாகவே மாறிவிட்டது, அந்தக் குழந்தையைக் கண்டாலே ஒதுங்கி ஓட ஆரம்பித்து விட்டார், தெரிந்த நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் என்னிடம் அழைத்து வந்தார்கள், சிகிச்சைக்குப் பிறகு இப்போதுதான் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்திருக்கிறார்.
அசிங்கமாக நடந்து கொள்வது போல, அவமானப்படுவது போல எண்ணங்கள்:
இளைஞர் ஒருவருக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவர்
களுடன் பாலுறவு கொள்வது போல எண்ணங்கள் தோன்றும், வெளியில் இருக்கும் பெண்களின்மீது வந்து கொண்டிருந்த எண்ணம் வீட்டிலிருக்கும் சகோதரிகளின் மீதே, உறவினர் பெண்களின் மீதே
வரவும் மிகுந்த குற்றவுணர்ச்
சிக்கு உள்ளாகியிருக்கிறார்.
அதே போல இன்னொரு இளைஞர்
அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரது மார்பைப் பிடிப்பது போல எண்ணப் வந்திருக்கிறது. இவற்றைப் போல சில மோசமான சம்பவங்களில் ஈடுபடுவது போலவும் அதனால் அவமானப்படுவது போன்ற எண்ணங்களும், காட்சிகளும் திரும்பத் திரும்ப வந்திருக்கின்றன.
பத்து வயது சிறுவன் ஒரு முறை அவனது அம்மா அவனுக்கு குனிந்து சாப்பாடு போடும்
போது அவளின் மார்பு பிளவை பார்த்து
விட்டான், அதிலிருந்து அந்த காட்சியே அவனுக்குள் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டி
ருந்திருக்கிறது.
இந்த எண்ணங்கள் அனைத்தும் அவர்கள்
விருப்பமின்றியும், அவர்களை மீறியுமே வந்து
கொண்டிருக்கும் இப்படி வருவதால் அதை வெளியிலும் சொல்ல முடியாமல், உதவியும் கேட்க முடியாமல் தங்களுக்குள்ளாகவே வருத்தப்பட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகிக்
கொண்டு இருப்பார்கள். இப்படிப்பட்ட எண்ணங்
கள் வருவதால் அவர்களின் ஆளுமையையோ, பண்புகளையோ நாம் சந்தேகப்படக்கூடாது உண்மையில் நல்ல பண்புகள் இருப்பதாலும், இதை தவறு என உணருவதாலும்தான் அவர்கள் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகி மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருவதாலேயே அவர்களின் ஆளுமை சரியில்லை என நாம் முடிவுக்கு
வந்துவிடக்கூடாது, உண்மையில் இப்படி
யெல்லாம் யோசிக்க கூடாது, நினைக்கக் கூடாது என எவ்வளவு முயன்றும் அதை நிறுத்த
முடியாமல் அதிலிருந்து எப்படி வெளியே போவது
என்றும் தெரியாமல் மிகுந்த துயரத்திற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாவது
இந்த வகை அப்சசனால் பாதிக்கப்
பட்டவர்கள்தாம். அதுவும் பெண்களுக்கு இப்படிப்பட்ட பாலியல் சார்ந்த எண்ணங்
கள் வரும் போது அவர்
களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும், சில நேரங்களில் தற்கொலை வரை கூட செல்வார்கள்.
மனதில் தோன்றுவதை
யெல்லாம் செய்துவிடுவேனோ என்ற அச்சம்:
மனதில் தோன்றும் சில தூண்டுதல்
களையெல்லாம் கட்டுப்பாடில்லாமல், நிதான
மில்லாமல் செய்துவிடுவேனோ என்ற அச்சம்
திரும்பத் திரும்ப வரும். அண்மையில் பார்த்த
கல்லூரி மாணவிக்கு சாலையில் எல்லோரும்
பார்க்கும்படி சிறுநீர் போகலாம் என்று உள்ளுக்குள்
ஒரு தூண்டல் திரும்பத் திரும்ப வந்து கொண்டி
ருந்தது. அப்படியெல்லாம் செய்யமாட்டோம்
என நம்பிக்கை இருந்தாலும், ஒருவேளை
அப்படி செய்துவிட்டால் என்னவாகும் என்ற
அச்சமும் அடிக்கடி வரத் தொடங்கியது.
எந்த நேரமும் இந்தத் தூண்டலுடன் போராடிக்
கொண்டேயிருந்ததால் படிப்பில் கவனம் இல்லாமல் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்திருந்தாள். இந்த வகை அப்சசனில் அவமானப்படுவதும், பொது இடங்களில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டு விடுவேனோ என்ற எண்ணமும், தூண்டலும் அதிகமாக இருக்கும்.
– தொடரும்…





