Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இளம் பெண்கள் சந்திக்கும் சமூக, உளவியல் சிக்கல்கள் கருத்தரங்கம்

அண்மைக் காலமாக தொடர்ந்து இளம் பெண்கள் தற்கொலை நிகழ்ந்து வரும் சூழலில் அவை குறித்து விவாதிக்க “ இளம் பெண்கள் சந்திக்கும் சமூக, உளவியல் சிக்கல்கள் “ என்னும் தலைப்பில் ஒரு சிறப்பான கருத்தரங்கத்தைத் திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிடர் மகளிர் பாசறை இணைந்து சென்னை பெரியார் திடலில்
திராவிடர் கழகத்தின் மாநில மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் தலைமையில் மாநில மகளிரணி துணை செயலாளர் இறைவி அவர்களின் வரவேற்புரையுடன் 19.07.2025 அன்று நடைபெற்றது.

செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. வெற்றிச் செல்வி, பூவை செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், தாம்பரம் நாகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் பா.மணியம்மை, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் விளக்கினார். மன நல ஆற்றுப்படுத்துனர் வில்லவன் பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்குத் தள்ளப்படுவதில் உளவியல் ரீதியாக உள்ள பிரச்சனைகளை விளக்கியும், சமூகம் இந்த பிரச்சனையை எவ்வாறு அறிவியல் ரீதியாக அணுகுவது என்றும் விளக்கமாக உரையாற்றினார். புதிய குரல் நிறுவனர் எழுத்தளர் ஓவியா அவர்கள் திருமணம் அதன் செலவுகள் தொடங்கி, சொத்துரிமை பெண்களுக்கு ரீதியாக வழங்கப்பட்டாலும் கிடைக்காமல் இருப்பதற்கு தடையாக உள்ள வரதட்சணை பிரச்சனையை நன்கு விளக்கியும், அரசும் இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்தும் உரையாற்றினார். திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி நீதிமன்ற தீர்ப்புகள் பெண்களை எப்படிப் பார்க்கின்றன என்பதில் தொடங்கி,  தொடர்ந்து பெண்களுக்கு அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதில் உள்ள சமூகச் சிக்கல்களை விளக்கியும், பெண்களுக்கு குடும்ப ரீதியான சிக்கல்கள், பெற்றோர் புரிந்துகொள்ள உள்ள பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாகவும் எளிமையாகவும் உரையாற்றினர்.

மாநில திராவிடன் கழக மகளிர் அணி துணைச் செயலாளர்கள் தேன்மொழி இணைப்புரையும் வி.கே.ஆர்.பெரியார் செல்வி அவர்கள் நன்றியையும்
வழங்கினர்.இந்த நிகழ்வில் திராவிடக் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான இளம் பெண்களும் பங்கேற்றனர்.