Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புலவர் இமயவரம்பன் நினைவு நாள் ஆகஸ்ட் – 9 (1994)

கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும், தொண்டாற்றவும், இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழுநேரத் தொண்டர்களாக இன்னும் சிலபேர் வேண்டியிருக்கிறார்கள். இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு, தனது குடும்ப பெரிய சொத்து நிருவாகத்தையும் விட்டு, மற்றும் பணத்தோடு வரக்கூடிய பல சவுகரியங்களையும் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்துகொண்டு, கழகத்திற்கு ஒரு வேலையாளாக 3, 4 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருகிறார்.