காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதைக் குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் மற்றும் வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.





