திருமலை நாயக்கனின் படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பழனிமலை கோயிலுக்கு வழிபடச் சென்ற போது. அங்கே பார்ப்பனரல்லாத பண்டாரங்கள் வழிபாடு நடத்துவதைப் பார்த்து அவர் மனம் கொதித்து, அவர்களிடம் இருந்து திருநீறை வாங்கிக் கொள்வதற்கு அவர் மறுத்தார், உடனடியாக மதுரைக்குத் திரும்பி பண்டாரங்கள் அத்தனை பேரையும் பதவியில் இருந்து நீக்கி இனி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று உத்தரவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?





