Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சாத்தியங்களுடன் விரிந்தே கிடக்கும் தொடுவான எல்லைக் கோடு

ஜூலை 9, 2014, இஸ்ரேல் தனது அண்மையத் தவணையாக, முழுஅளவிலான குண்டுவீச்சை காஸாவில் தொடங்கியது. அது, இரக்கமற்றதோர் செயல்பாடு. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனக் குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர். பத்தாயிரக்கணக்கானோர் தட்டழிந்து இடம் பெயர்ந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சிதைந்துபோயின. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் இடித்துத் தகர்க்கப்பட்டன. இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை, புதியவகை ஆயுதத்தை எழுப்பி, அழிவினை உண்டாக்கும் Dense Inert Metal Explosive மிகக்கொடிய ஓசையைப் பயன்படுத்தியிருக்கின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு முன்புவரை, அரசியல் அக்கறை கொள்ளும் பொருள்தொகுதி எதுவும் அங்கிருக்கவில்லை. பாலஸ்தீனியர்களை அச்சமூட்டும் நடவடிக்கைகள் மட்டுமே இருந்து வந்தன. இந்தக் கொடும் வன்முறையின் மூலம் ஒவ்வொரு நாளும், கழுத்து நெறிபடும் வாழ்க்கையாய் ஆகியிருக்கின்றது.

ஒரு மந்திரக்காரனாக, பாலஸ்தீன அறிவுஜீவி எட்வர்ட் செய்த் (1935-2003) மிகச் சிறப்பான பணியொன்றைச் செய்திருக்கின்றார். நாங்கள் அவரது கட்டுரைகளில் இரண்டைப் பொறுக்கியெடுத்திருக்கின்றோம். இரண்டுமே, பாலஸ்தீனியர்கள் மிகவும் இடரார்ந்த காலகட்டத்தில் இருந்தபோது, எழுதப்பட்டவை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் பாலஸ்தீனியர்கள் இருந்ததெல்லாம். எல்லோரும் முன்னமே கீழ் மற்றும் திறன்மிகு தலைமை இல்லாத நிலையில் அறிந்தது தான். அதனால் அந்த அடக்குமுறையின் விவரங்கள், அதில் இருக்கும் பிரச்சனை, பொருள்விளக்கம்; அதனாலேயே, இந்தக் கட்டுரைகளின் மய்யமாக அமைக்கப்படவில்லை. இன்னும் புதுமை குன்றாமல் மலர்ச்சியுடன் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் முதலில் எழுதப்பட்டது போலவே, ‘கண்ணியம், ஒற்றுமை மற்றும் தண்டனைக் குடியேற்றம்’ எனும் நூல் எட்வர்ட் செய்த் எழுதி, கடைசியாகப் பிரசுரமான ஒன்று.

அவற்றுக்கான வெளியைத் திறந்துவைக்க, பாலஸ்தீன எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் ராஜா ஷிஹாதே 2014இல் ஆற்றிய, எட்வர்ட் செய்த்தின் நினைவுச் சொற்பொழிவை நாங்கள் அச்சாக்குகின்றோம். அது, எட்வர்ட் செய்த்தின் மதிப்பீடுகளை, எங்கள் சூழலுக்கு இணைவாகக் கொண்டு வந்திருக்கின்றது. அந்த நிலப்பரப்பில், விளைவுகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை இந்தக் கட்டுரைகள், காஸா பகுதியில் – ஷுஜாய்யாவுக்கு அடுத்துள்ள அல் அஸ்கா மருத்துவமனையில் – மழைபோலக் குண்டுகள் பொழிந்து கொண்டிருந்தபோதும், தளரா நம்பிக்கையை உணர்வுகொள்ளச் செய்கின்றன.

‘பாலஸ்தீன், செய்த்தின் ஆய்வுணர்வுக்குரிய விசாரணைக்கு, முதன்மைப் பகுதி அல்ல. அவர் ஒரு கலாச்சார விமர்சகர். ஜோசப் கன்ராட்டின் இசையைப் பற்றி நூல் எழுதியவர். அவர் ஓர் இலக்கிய விமர்சகர். தொடங்குதல் மற்றும் சூழமைவுக் குறித்து எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேல், செய்த் ஒரு பாலஸ்தீன எழுத்தாளர். தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியின் உள்ளுணர்ச்சிகளையும் அதன் துல்லியத்தையும் எழுதியவர். ஓரியண்டலிசம் (1978), செய்த்தின் எழுத்தாண்மைக் கலையாக்கமாகப் பலரால் பார்க்கப்படுகின்றது. குடியேற்ற நாடுகளின் வாழ்வியல் மரபுகுறித்த நுண்ணிய பகுத்துணர்வை மட்டும் அவர் எழுதவில்லை. கூடவே, அரசியல் சகதியில் தோய்க்கப்பட்ட மூக்குகளையும் அவர் அடையாளம் காட்டுகின்றார்.

‘ஓரியண்டலிசம், துன்பியல் நாடக மூன்றின் தொகுதியில், முதல்பாகமாகும். நீண்ட மரபுகொண்ட சூழ்ச்சித் தந்திரங்களின் கைத்திறத்தால், கீழ்த்திசை உலகம் தாழ்ந்தது மற்றும் அய்ரோப்பாவுக்குக் கீழானது என்று இறுமாந்திருந்த மேலைக் கணக்குகளை, மிச்சமீதியின்றி நேர் செய்து முடித்து வைக்க வந்த நூலது. குடியேற்ற நாடுகளின் அதிகாரத்தைக் குத்திக் கேட்கும் வேல்கம்பும் அதுதான். விரிவாகச் சிந்திக்கின்ற வழிமுறைகளையும், அதற்கான தயாரிப்புகளையும் கொண்ட சூத்திரமும் அந்த நூல்தான். வெளிப்படுத்துதல் மற்றும் அதிகாரத்தைத் தெளிவுபடுத்திய அந்த நூலுக்குப் பிறகு, இரண்டு நூல்கள் அவரால் எழுதப்பட்டன. அவை, The Question of Palestine (1979) and Covering Islam (1981).

பாலஸ்தீன பிராந்திய அரசியல், கீழ்த்திசைப் பார்வையால் நிரப்பப்பட்டது. ஒரு மனிதனின் தற்சார்புரிமையைக் கோரிப் பெறுதல், அத்தனை எளிதான ஒன்றாக இல்லை. அன்றாடத் துன்பங்களைத் தாண்டி, கற்பிதம் செய்யப்பட்ட இந்தப் பகுதியில், பிணப் போர்வைக்குள் வாழும் பாலஸ்தீன மக்கள், எந்த வழியில் எப்படி இயங்கவேண்டும் என்பதை, படம் வரைந்து காட்டுகின்றார், செய்த். மூன்றாவது புத்தகம், மேற்கத்திய ஊடக உலகம், ‘கிழக்கு’க்குறித்த அத்தனை கேள்விகளுக்கும் விடையாக, இஸ்லாமுக்கு எப்படி உருவம் கொடுத்து வைத்திருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ‘இஸ்லாம்’ என்ற இந்தச் சொல், பிராந்தியத்தின் மற்ற அர்த்தப்பூர்வமான ஒட்டுமொத்த இயல் ஆற்றல் கோட்பாடுகளான, பொருளாதார மற்றும் அரசியல் தன்னுரிமையற்ற நிலைகளை, மூடிப் பாதுகாத்துக் கொள்கின்றது. ஈரானின் பெருமாற்றத்தை ‘புரட்சி’ என்று குறிப்பிடாத ஊடகங்கள், அதை இஸ்லாமியச் சீற்றத்தின் திடீர் உணர்ச்சியெழுச்சி என்றும், சுதந்திரத்துக்கான மக்கள் வேட்கையல்ல என்றும் எழுதின.

கீழையுலக மரபுத்தொடர் என்னும் ‘ஓரியண்டலிசம்’, மேற்கத்திய ஊடக உலகத்தால் திறந்து வைக்கப்பட்ட பொதுக் கருத்துவெளியைத் துடைத்தழிக்கின்றது. இந்தப் புத்தகம் ஆராய்ச்சிப் பரப்பெல்லையை விரித்துவைக்கின்றது – குறிப்பாக, பின்காலனித்துவ ஆராய்ச்சிகளை. ஆனால், அதையோர் அசைவியக்கப் பணியாக அது, செய்யவில்லை. அதனை செய்த்தின் கட்டுரைகள் பாலஸ்தீன விடுதலைக்காகச் செய்கின்றன.

செய்த், தான் பிறந்த நாட்டின் மீது, அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் மீது, மிகுந்த அக்கறை கொண்டவர். அதேவேளையில் அவர் குருட்டுத்தனமான ஆர்வலர், அல்லர். மிகமோசமான விளைவுகளைத் தரக்கூடிய ஆஸ்லோ (1993) ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தவர். யாசர் அராபத்தும், இஸ்ஸாக் ராபினும் செய்துகொண்ட அந்த ஒப்பந்தத்தை, *Fashion show Vulgarities’ என்று வர்ணித்தார். பிராந்தியத்தின் நிச்சயத்தன்மையைக் குடாப் போர் தகர்த்துக்கொண்டிருக்கின்றது; மண்ணின் மைந்தர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது; அங்கே அராபத், கையொப்பம் போட்டுக்கொண்டிருக்கின்றார். அதனை செய்த், ‘இதுவொரு சாதகமான தன்னொப்படைப்பு’ என்று குறிப்பிடுகின்றார். அந்த நேரத்தில், செய்த் தான் விடுத்த எச்சரிக்கைக்காகத் தாக்கப்படுகின்றார். அப்போது இஸ்ரேலின் மிகமுக்கிய அறிஞரான அவிஷ்லைமும் செய்தைத் தாக்குகின்றார். இரண்டு பத்தாண்டுகளுக்குப் பின்பு, அவிஷ்லைம், ‘இன்றிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு, செய்த் சொன்ன கருத்து சரியானதுதான்’ என்றும், ‘தனது செயல்பாடு தவறானதுதான்’ என்றும் ஒத்துக்கொள்கின்றார்.

காஸாவிலிருந்து புகையத் தொடங்குகின்றது. பாலஸ்தீனில் நம்பிக்கை மிகவும் குறைந்து காணப்படுகின்றது. இந்தநிலையிலும்கூட, பாலஸ்தீனத்தின் எதிர்காலத்துக்காக உருவாகிவரும் இயக்கங்களின் தொடுவான எல்லைக் கோடுகள், சாத்தியங்களுடன் விரிந்தே கிடக்கின்றன. q