“ இன்று கோயிலுக்கும், ஹோட்டல்
களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள். காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று வரிசையாய்ப் பலகையில் விலை போட்டு இருப்பது போல, கோயிலிலும் இறைவனை வழிபடுவதற்கும் இன்ன இன்ன ரேட் (விகிதம்) என்று ஆக்கிவைத்து விட்டார்கள்’’ (‘விடுதலை’ – 6.12.1960 பக்கம் 3) இவ்வாறு பேசியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
கருஞ்சட்டைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை, காவி உடையில் சொன்னவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார். தவத்திரு அடிகளார் அவர்களைக் கருப்புச்சட்டை சாமியார் என்று பொதுமக்கள் வருணிக்கும் அளவுக்கு நிலைமை இருந்ததை, யார்தான் மறுக்க முடியும்? “தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல் ‘விடுதலை’ தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.’’ என்றாரே – என்னே இனநலம் – தமிழ்நலம்!
– ஆதாரம் : ‘விடுதலை’ 2.11.1965
நினைவு நாள்: ஏப்ரல் 15 (1995)