Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பானகல் அரசர் (பிறப்பு – 09.07.1866)

தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதர் இராமராய நிங்கர் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர்.

தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பானகல் ராஜா சர். இராமராய நிங்கவாரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்கிற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே  இருக்காது என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு எழுதுகிறார் என்றால், பானகல் அரசரின் அருமை பெருமை எளிதாகவே விளங்கும்.

பானகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக அவர் பொறித்த சாதனைகள் அசாதாரணமானவை. மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்றிருந்த தடையை உடைத்துத் தூக்கி எறிந்த பெருமகன் அவர். அந்தக் காலகட்டத்தில் கல்லூரிகளில் முதல்வர்களாக இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள் தாம்.

பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரியில் நுழைவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.

அத்தகு கசப்பான சூழலில், கல்லூரி
களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மாணவர்களைச் சேர்க்க வழிவகை
செய்து, பார்ப்பனர் அல்லாதார் வயிற்றில் பாலை வார்த்தார்.

பார்ப்பனர்களின் வேட்டைக்காடாக இருந்த கோயில்களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறநிலையத் துறை என்ற ஒன்றைக் கொண்டுவந்தவரும் அவரே!

பறையன், பஞ்சமன் என்றிருந்த பெயர்களை மாற்றி ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவரும் அவரே! q