Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!- முனைவர் கடவூர் மணிமாறன்

அலகா பாத்தில் பூனாவில்

அறிவுக் கல்வியைப் பயின்றிட்டார்!

நலமுற நாட்டு மக்களெலாம்

நன்மை பெறவே உழைத்திட்டார்!

 

இடஒதுக் கீடோ இருபத்தேழினை

எய்திட இவரே வழிவகுத்தார்!

கடமை யாற்றலில் கவனம்மிக்கவர்

கண்ணியம் காத்தே கவர்ந்திட்டார்!

 

அரசர் குடும்பம் தனில் பிறந்தார்!

அன்புடன் மகிழ்வைப் பகிர்ந்திட்டார்!

உரிமை உயிரென உணர்ந்திட்டார்!

ஒடுக்கப் பட்டோர் நலன்காத்தார்!

 

மண்டல் ஆணையப் பரிந்துரைகள்

மாண்புற ஏற்றிவர் செயல்பட்டார்!

உண்மை நேர்மை எளிமைக்கோர்!

உயரிய எடுத்துக் காட்டிவரே!

 

தில்லி அரசியல் நாகரிகம்

தேர்ந்தே நலமுறக் கடைப்பிடித்தார்!

எல்லா ருக்கும் எல்லாமும்

என்றநம் கலைஞர் உயிர்த்தோழர்!

 

சான்றோர் உயர்ந்தோர் வாழ்த்துகிற

சமூக நீதிக் காவலராம்

தேன்போல் பற்பல நலத்திட்டம்

தேடிக் கொணர்ந்த தலைவரிவர்!

 

அருஞ்செயல் ஆற்றிய பண்பாளர்!

ஆட்சியை இழந்தார் பகையாலே!

பெருங்குண ஆளுமை வி.பி.சிங்

பெருமை எண்ணி வாழ்த்துவமே! w