உத்தரப்பிரதேசம் அலகாபாத் சமஸ்
தானத்தின் மன்னருக்கு மகனாகப் பிறந்த
விசுவநாத் பிரதாப் சிங் மண்டல் குழு
அறிக்கையை அமல்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக்காகத் தன் பிரதமர் பதவியை இழந்தவர்.
சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலி
களையும் இழக்கத் தயார் என்ற பெருமகன் அவர். டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஒன்றிய அரசின் சார்பில் கொண்டாடச் செய்தவர்.