Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

காளிக்கும் மாரிக்கும்
காலைக்கும் மாலைக்கும்
நெனைச்சது நடக்கனுமுன்னு
நெய்விளக்கு ஏத்திவச்சேன்,
மனக்குமுறல்
மறையனுமுன்னு
மாவிளக்கும்
ஏத்திவச்சேன்,
பொய்விளக்கா
போனதினு
புலம்பிகிட்டே நிக்கி,
என் புகைப்படத்தின்
முன் எரியும்
குத்துவிளக்கு!

– ஆல. தமிழ்ப்பித்தன்
புனல்வேலி