Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிரபல பிரமிட் சாமியாரின் லீலைகள் டிவியில் அம்பலம்

பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம் என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி.(இந்த சமியாரும் பல சாட்டிலைட் டீவியில் காலையில் பெண்ளை மட்டும் மாடலாக வைத்து? த்யானம் கற்றுக் கொடுப்பார்)

கடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார்? சுபாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண்டைமாநிலங்களில் இருந்தும் வி.ஐ.பி.,கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், பெண்களை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதும், அவர்களுடன்,சில்மிஷம் செய்வதுமாக, சாமியார் பத்ரி, காம செயல்களில் ஈடுபட்டுள்ளார்.  இதை ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, டிவி சேனல்களுக்கு அந்த காட்சிகளை கொடுத்து ஒளிபரப்ப செய்து விட்டார். அந்தகாட்சிகள், தெலுங்கு சேனல்கள் பலவற்றிலும்  ஒளிபரப்பானது. இதனால் அதிர்ச்சி அடைந்த, மகபூப்நகர் மாவட்ட கலெக்டர்,
கிரிஜா சங்கர், சாமியாரின் செயல் பாடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.