Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை

பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சுமார் 630 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத் தில் உச்சநீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான குழு ஜனவரி 23 அன்று சமர்ப்பித்துள்ளது.

மரண தண்ட னைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,அதுபோன்ற குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், கூட்டுப் பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட் சமாக ஆயுள் தண்ட னையும் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாக டில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறியுள்ளார்.

குழுவின் பரிந்துரைகள் பற்றி தில்லியில் செய்தியாளர் களிடம் ஜே.எஸ்.வர்மா கூறும்போது,“

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத் தம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 80,000 யோசனைகள் எங்களுக்கு வந்தன. இளைஞர் கள் பலர் முதிர்ச்சிமிக்க யோசனைகளை தெரி வித்தனர்.பொதுமக்கள் பங்கு பெறும் மின்ஆளுகை யில் வெளிப்படைத்தன் மையை உறுதிப்படுத்த வேண்டும்.

குற்றம் செய்வோர் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் நூறாவது பிரிவில், பாலியல் கொடுமைக்கு உடல் ரீதியாக ஆளாகும் போது தற்காப்புக்காக தடுக்கும் உரிமை வழங்குதல் என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான வன்முறையின்போது, சட்டத்தை மீறுவோரையும், அதைத் தடுப்பதற்கு சட்டரீதியான கடமையை செய்யத் தவறும் அரசு ஊழியர்களுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் 376(அ) பிரிவின்படி, பெண் மீது அமிலம் வீசப்பட்டால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யலாம். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக அய்ந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரை வழக்கமான சட்ட விதிகளின்படியே தண்டிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல ஆயுதப் படையினர் சிறப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யலாம்,எனத் தெரிவித்தார்.