Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடவுளைக் கற்பழியுங்கள்!

பெண்கள் ஒழுங்காக உடை உடுத்திச் சென்றால் ஏன்  கற்பழிப்புச் சம்பவம் நடக்கப் போகிறது? எனச் சிலர் கேட்கின்றனர்.

6 வயது, 7 வயது சிறுமிகளைக்  கூட பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே, அதற்கு என்ன காரணத்தை இவர்கள் சொல்லப் போகிறார்கள்.

தன்  வீட்டில் சிறுமிகள் நிர்வாணமாகக் கூட இருப்பார்கள். அதுசமயம் இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவார்களா?

40, 50 ஆண்டுகளுக்கு முன்னர், நம் பெண்கள் இரவிக்கை  அணியக்கூட உரிமை இல்லாமல் இருந்தார்களே? அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதா?

பெண்களின் மார்பு, இடுப்பு, கால்கள் தெரிவதால்தான் உணர்ச்சி வசப்பட்டு கற்பழிக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் பெண் கடவுள்களை முழு நிர்வாணத்தில் அப்படியே நிற்க வைத்துள்ளார்களே… அங்கே போய் உங்கள் கடவுளைக் கற்பழிக்க வேண்டியதுதானே?

– வி.சி.வில்வம்